பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் விலை உயர்வு மந்த நிலையில் கொப்பரை

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி:தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.பொள்ளாச்சி, நெகமம் பகுதியில், தென்னை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டுவதால், தரமான இளநீர், தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக, தேங்காய் உற்பத்தி அதிகமிருந்தும், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைந்து உள்ளது. இதற்கு, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் கொள்முதல் குறைந்துள்ளது காரணமாக கூறப்படுகிறது.நேற்றைய காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, கொப்பரை ஸ்பெஷல் ரகம் கிலோ - 106 ரூபாய், சாதாரண ரகம் - 104 ரூபாயாகவும் இருந்தது.

தேங்காய் பவுடர் கிலோ, 164 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் - 2,170, தேங்காய் பச்சை ரகம் டன் - 35,500 ரூபாய், கருப்பு ரகம் - 38,500 ரூபாய்க்கும் விற்றது.தேங்காய்க்கு தொடர்ந்து கிராக்கி நிலவுவதால், உள்ளூர், வெளிமாநில வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, கொப்பரைக்கும், ஆயிலுக்கும் போதிய வரவேற்பில்லாமல் உள்ளது.

கடந்த ஒரு வாரமாக மந்தநிலை நீடிக்கிறது. வரும் நாட்களில் மகா சிவராத்திரி விழா வர உள்ளதால், வடமாநிலங்களில், தேங்காய் கொள்முதல் அதிகம் இருக்கும் என்பதால், தேங்காய் விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக தேங்காய் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X