தமிழ்நாடு

முதல் போக சாகுபடி நெல் அறுவடைக்குத் தயார்

Added : பிப் 12, 2020
Advertisement

தேவதானப்பட்டி, வில்புரம், சில்வார்பட்டியில் முதல் போக சாகுபடி நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராக நதியில் வரும் நீர், வடுகபட்டி வெள்ளக்காடு அணை அருகே தடுப்பணை கட்டி 8 கிலோ மீட்டர் துாரம் கால்வாய் மூலம் கொண்டுவந்து இக்கண்மாயில் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் 150 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கோவில்புரத்தில்வராகநதியில் வரும் நீரை ஆதாரமாக கொண்டு 200 ஏக்கர் பரப்பில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு ஊர்களிலும் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இன்னும் ஒருவாரத்தில் அறுவடை துவங்க இருக்கிறது.கோவில்புரம் விவசாயி பரமசிவம் கூறுகையில், ''பாசன நீர் பிரச்னை ஏற்படவில்லை. நோய் தாக்குதல் இல்லை. நெல் விளைச்சல் நல்லபடியாக உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X