பொது செய்தி

தமிழ்நாடு

டாப்சிலிப்பில் குடிநீர் இயந்திரம்: பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு

Added : பிப் 12, 2020
Advertisement
 டாப்சிலிப்பில் குடிநீர் இயந்திரம்: பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், பிளாஸ்டிக் பாட்டில்கள் பரவுவதை தவிர்க்க, வனத்துறையினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வைத்து உள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. யானை சவாரி, மலையேற்றம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.டாப்சிலிப் வழியாகத் தான் பரம்பிக்குளம் செல்ல முடியும். இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், சுற்றுலா வருவோர் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்தினுள் வீசுகின்றனர்.

இதனால், வனச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், டாப்சிலிப் 'கேன்டீன்' அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை வனத்துறையினர் வைத்து உள்ளனர். இதில், ஐந்து ரூபாய்க்கு, ஒரு லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ரூபாய் நாணயத்தை இயத்திரத்தில் செலுத்தி குடிநீர் பெறலாம்.

டாப்சிலிப் வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறியதாவது:சுற்றுலா பயணிகள் பலரும் டாப்சிலிப் 'கேன்டீனில்', பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வாங்கி, பயன்படுத்திவிட்டு வனத்தினுள் வீசுகின்றனர். தாங்கள் கொண்டு வரும் பாட்டில்களையும் வீசுகின்றனர்.பயன்படுத்திய பாட்டிலை மீண்டும் அவர்கள் மறுபயன்பாடு செய்வதற்காகவும், சுத்தமான குடிநீர் வழங்கவும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப் பட்டு உள்ளது.

மேலும், 'கேன்டீனில்' பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் விற்பனையும் பெரும் அளவு குறைக்கப் பட்டு உள்ளது. பாட்டில்களை வனத்தினுள் வீசாமல், வனத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X