சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை வழக்கு: மனைவி கள்ளக்காதலரிடம் விசாரணை

Added : பிப் 12, 2020
Advertisement

மூணாறு, சாந்தாம்பாறை அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் மும்பை சிறையில் இருந்து போலீஸ் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.கேரளா, இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை, புத்தடியைச் சேர்ந்த ரிஜோஷ் 31, கழுதைகுளம்மேட்டில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் வேலை செய்து வந்தபோது, கள்ளக்காதல் தகராறில் கடந்த அக்டோபரில் கொலை செய்யப்பட்டார்.இந்தவழக்கில் ரிஜோஷ் மனைவி லிஜி 29, அவரது கள்ளக்காதலன் வாசிம் 31, ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இருவரும்மும்பைக்கு தப்பிச் சென்ற நிலையில், லிஜி தன்னுடன் இரண்டு வயது மகள் ஜொவானாவை அழைத்துச் சென்றார்.அங்கு தனியார் தங்கும் விடுதியில் வைத்து கடந்த நவ., 9ல் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, கள்ளக்காதலர்களும் விஷம் குடித்தனர். குழந்தை இறந்த நிலையில், அவர்கள் உயிர் தப்பினர்.இது தொடர்பாக மும்பை, பன்வேல் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விசாரணைக்காக தங்கள் காவலில் விட சாந்தாம்பாறை போலீசார் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட் இருவரையும் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியது.சாந்தாம்பாறை இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பை சென்று இருவரையும் இங்கு அழைத்து வந்தனர். வழக்கு தொடர்பாக இருவரையும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நெடுங்கண்டம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X