தமிழ்நாடு

குடிசைகளுக்கு இலவச மின்விளக்கு திட்டம் புதிய விதிகளுடன் 'டிபாசிட்' செலுத்த உத்தரவு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

தேனி :குடிசைகளுக்கு இலவச மின்விளக்கு திட்டத்தில் மாற்றம் செய்து டிபாசிட் செலுத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை, எளியோர் மண்ணெண்ணெய் விளக்குளை பயன்படுத்தினர். பல நேரங்களில் அவற்றில் தீப்பற்றி உயிர்கள் பலியாகின. இதனையறிந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குடிசைகளுக்கு ஒரு பல்பு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெற்றன.தற்போது நவீன வாழ்க்கை முறையில் அனைவரின் வீடுகளிலும் மின்னணு சாதனங்கள் பயன்பாடு உள்ளது. மேலும் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க அரசு ரூ.11 செலவிடுகிறது. ஆனால் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறது. இலவச மின்சார திட்டத்தில் நஷ்டமடைந்ததால் முறைப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.புதிய கட்டுப்பாடுஎனவே, ஒரு விளக்கு இலவச மின்சாரம் பெறும் குடிசைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் குடிசை வீடு 200 சதுர அடியில் இருக்க வேண்டும். அரசு வழங்கும் இலவச மின் சாதனங்களான 'டிவி', மிக்ஸி, பேன் மட்டும் பயன்படுத்தலாம். வீடு முதலில் யார் பெயரில் உள்ளதோ அவர், அவரதுவாரிசுதாரர் பயன்பெற பெற தகுதி பெறுவார்கள். இந்த வீட்டை மற்றொருவர் விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் தகுதி இழப்பாகும். அந்த வீட்டிற்கு ரூ.910 டிபாசிட் செலுத்தி, வீட்டு இணைப்பாக மாற்றி மின்சார பயன்பாடு கணக்கிடப்படும். இதுதவிர இந்த வீடுகளில் மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தி மின் செலவு அதிகரித்தால் ரூ.2,830 டிபாசிட்டுடன் வீட்டு மின் இணைப்பு கட்டணமாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X