பிப்., 24 - 25ல் இந்தியா வருகிறார் டிரம்ப்; உறுதி செய்தது அமெரிக்கா

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா டிரம்ப், வரும், 24, 25ல் இந்தியாவுக்கு பயணம் செய்கின்றனர். அவர்கள் டில்லி மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்' என, அமெரிக்க அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு, செப்.,ல் அமெரிக்காவுக்கு பயணம்
Trump,US_president,India,visit,டிரம்ப்,இந்தியா,அமெரிக்கா,பயணம்

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா டிரம்ப், வரும், 24, 25ல் இந்தியாவுக்கு பயணம் செய்கின்றனர். அவர்கள் டில்லி மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்' என, அமெரிக்க அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு, செப்.,ல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூஸ்டனில் நடந்த, 'ஹவ்டி மோடி' என்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், டிரம்ப் பங்கேற்றார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் வரும்படி, டிரம்புக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தாண்டு, ஜன., 26ல் நடந்த, குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரும்படி, டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருந்ததால், டிரம்ப் பங்கேற்க முடியவில்லை. இந்த மாதத்தில், டிரம்ப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாயிது. இந்த நிலையில், வரும், 24 மற்றும் 25 என, இரண்டு நாள் பயணமாக டிரம்ப் வர உள்ளார்.

இது குறித்து, அமெரிக்க அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலர் ஸ்டெபானி கிருஷம் கூறியதாவது:அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வார இறுதியில், தொலைபேசியில் உரையாடினர். அதைத் தொடர்ந்து, டிரம்பின் இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும், 24, 25ல் அவர் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்கா - இந்தியா இடையேயான சிறந்த நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில், இந்தப் பயணம் அமைய உள்ளது. டில்லி மற்றும் குஜராத்தின், ஆமதாபாதில் நடக்கும் நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்கிறார். அவருடைய மனைவி மெலினா டிரம்பும் உடன் செல்கிறார். இவ்வாறு, அவர் கூறினார். கடைசியாக, 2015ல், அமெரிக்க அதிபராக இருந்த, பராக் ஒபாமா, இந்தியாவுக்கு வந்தார். அதன்பிறகு, அமெரிக்க அதிபர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

ரூ.10,688 கோடி திட்டம்:
வரும், அகஸ்ட் 1ல் துவங்கும் அமெரிக்க நிதியாண்டுக்கான பட்ஜட் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக, 10 ஆயிரத்து 688 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

'சீனாவின் செல்வாக்கு இல்லாமல், சுதந்திரமான, திறந்த, சுயசார்புடன், இந்தோ - பசிபிக் பிராந்தியம் திகழ்வதற்காக, இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் ஜனநாயக திட்டங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளா தார நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா வரவேற்பு:
டிரம்பின் பயண அறிவிப்பு குறித்து, இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியா- அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட உறவுகள், அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணத்தால், மேலும் வலுவடையும். இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புகள், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகம், ராணுவம், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்ற டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் விருப்பங்கள், மேலும் வலுப்படும். இவ்வாறு, செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
12-பிப்-202014:11:23 IST Report Abuse
Raman Muthuswamy Although let off by the American Senate from the DISGRACE OF IMPEACHMENT, due to a slender majority, Trump has chosen to visit India at this particular juncture, in His Own Self-Enlightened Interest, as there's a sizeable Indian Population in the USA and their votes are needed by Him to win the forthcoming Elections to the Presidency NOTHING GREAT ABOUT HIS INDIA VISIT
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
12-பிப்-202006:05:51 IST Report Abuse
rajan டிரம்ப் வருவது ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X