சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயந்திரம் மூலம் உடைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயந்திரம் மூலம் உடைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

உடுமலை:பெரியகோட்டை ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி, 2வது வார்டில், பொதுக்கிணறு, மின் மோட்டார், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலக அறை உள்ளது.இதனை, ராமசாமி என்பவர், பொக்லைன் இயந்திரம் மூலம், கடந்த, 23ம் தேதி இடித்து, அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அரசு சொத்தை சேதப்படுத்தியதாக, ஊராட்சி செயலர் கந்தவடிவேல், உடுமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து, நேற்று ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் நாகமாணிக்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது :நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக அந்த மேல்நிலைத்தொட்டி உள்ளது. உடுமலை நகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான, 40 அடி ரோட்டை ஆக்கிரமித்து, சம்பந்தப்பட்டவர்கள் கோவில் கட்டி வருகின்றனர். அதோடு, தொட்டி அமைந்துள்ள பகுதியையும் ஆக்கிரமிக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான பயன்பாட்டிலுள்ள, வலை அமைத்து பாதுகாப்புடன் உள்ள கிணறு, குடிநீர் தொட்டி, ஊராட்சிக்கு சொந்தமான அறையை இடித்து, அகற்ற முயற்சித்துள்ளனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, பொது சொத்தை சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ரிசர்வ் சைட், ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குற்றவாளிகளிடமிருந்து செலவை வசூலிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X