பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டா வழங்காவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம்'

Added : பிப் 12, 2020
Advertisement

வால்பாறை:வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தப்படி, 15 நாட்களுக்குள் பட்டா வழங்கா விட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பழங்குடியினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறையில், 13 செட்டில்மென்ட்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில், வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி, உடனடியாக பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்கள் வசிக்கும் அனைத்து செட்டில் மென்ட் பகுதிகளிலும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன் தினம் வால்பாறையிலிருந்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணமாக செல்ல முயன்றனர்.அப்போது,வன துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட வைத்தனர்.பழங்குடியினர் சங்க நிர்வாகி தனராஜ் கூறுகையில், ''காடுகளை பாதுகாப்பது எவ்வளவு அவசியமோ, அதே போல் பழங்குடியின மக்களையும் பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்.

உரிமைக்காக போராடும் பழங்குடியின மக்களை ஒடுக்க கூடாது. வனத்துறை அதிகாரிகள் கூறியபடி, 15 நாட்களுக்குள் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்காவிட்டால், பட்டா வழங்கும் வரை போராடுவோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X