பொது செய்தி

தமிழ்நாடு

காதலர் தினத்திற்கு 'ஆர்டர்' தாமதம் 25 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி

Added : பிப் 12, 2020
Advertisement
 காதலர் தினத்திற்கு 'ஆர்டர்' தாமதம் 25 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி

ஓசூர் : தாமதமான, 'ஆர்டர்' காரணமாக, காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து, 25 லட்சம் ரோஜா பூக்கள் மட்டுமே ஏற்றுமதியாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரத்தில், 1,200 ஏக்கரில், பசுமை குடில் மூலம், ஏற்றுமதி தரத்திலான ரோஜா வகை சாகுபடியாகின்றன. ஆண்டுதோறும், காதலர் தினத்தை முன்னிட்டு, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு, ரோஜா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டு காதலர் தினத்துக்கு, 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதியாகின. நடப்பாண்டு, சீனாவில், 'கொரோனா வைரஸ்' பாதிப்பால், இந்திய மலர்களுக்கு, அதிக ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாமதமான ஆர்டரால், 25 லட்சம் ரோஜாக்கள் மட்டுமே, காதலர் தினத்துக்காக ஏற்றுமதி செய்யப்பட்டள்ளன.

இது குறித்து, ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: நடப்பாண்டில் பருவநிலை மாற்றத்தால், 10 நாட்களுக்கு முன்பாக, ரோஜாக்கள் பூக்க துவங்கி விட்டன. சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், தாமதமாக தான், ஓசூர் ரோஜாக்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன.முன்கூட்டியே ஆர்டர்கள் கிடைத்திருந்ததால், கூடுதல் ரோஜாக்களை ஏற்றுமதி செய்திருக்க முடியும்.

இதனால், 25 லட்சம் ரோஜாக்களை மட்டுமே, நடப்பாண்டு காதலர் தினத்துக்காக ஏற்றுமதி செய்துள்ளோம். 90 சதவீத ஏற்றுமதி, 9ம் தேதி முடிந்து விட்டது.சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை, மாலத்தீவு என, அருகில் உள்ள நாடுகளுக்கு மட்டும், 10 சதவீத ரோஜாக்கள், நேற்று வரை ஏற்றுமதியாகின. நடப்பாண்டு, 35 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதியாகும் என, எதிர்பார்த்தோம். எத்தோப்பியா, கென்யா நாடுகளில் நடந்த சாகுபடியால், அங்கிருந்து, வளைகுடா நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி நடந்துள்ளது. இதனால், நம் ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X