கிளை வாய்க்காலில் நீர் விரயம் கடைமடை விவசாயிகள் தவிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை:பூலாங்கிணறு கிளை வாய்க்கால், கரைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், நீர் விரயம் அதிகரித்து, கடை மடை பகுதி பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில், பூலாங்கிணறு கிளை வாய்க்காலில், 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பிரதான கால்வாயில், சர்க்கார்புதுார் ஷட்டர் அருகே, இவ்வாய்க்கால் பிரிகிறது. முதலாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசன பகுதிகளுக்கு, தனித்தனியாக ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், வாய்க்கால் கரை, பகிர்மான ஷட்டர் உட்பட பகுதிகளில், பொதுப்பணித்துறை சார்பில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், நீர் விரயம் அதிகரித்து, கடைமடை பகுதிகள், பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்காச்சோளம் உட்பட சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், கிளை வாய்க்கால் மூலம் நீர் பற்றாக்குறையாகவே கிடைக்கிறது. குறித்த நேரத்தில், தண்ணீர் பாய்ச்சாவிட்டால், விதைகளின் முளைப்பு திறன் பாதிக்கப்படும். எனவே, வாய்க்காலில், அதிக நீர் விரயம் ஏற்படும் பகுதிகளில், இரண்டாம் சுற்று தண்ணீர் திறப்புக்கு முன், கிடைக்கும் இடைவெளியில், பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X