பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை புலிகள் காப்பகத்தின்... எல்லை விரிவடைந்தது!:கூடுதல் பணியிடம் உருவாக்க கருத்துரு

Added : பிப் 12, 2020
Advertisement
 ஆனைமலை புலிகள் காப்பகத்தின்... எல்லை விரிவடைந்தது!:கூடுதல் பணியிடம் உருவாக்க கருத்துரு

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகம் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அலுவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சிமலையில், ஆனைமலை வனப்பகுதி கடந்த, 1976ல் ஆனைமலை வனவிலங்கு சரணாலயமாகவும்; 1987ல் இந்திராகாந்தி வன உயிரின உய்விடமாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த, 1989ல் தேசிய பூங்காக்கள் அறிவிக்கப்பட்டது.அதில், அக்காமலை புல்மலை, கரியன்சோலை, மஞ்சம்பட்டி ஆகிய, 107 சதுர கி.மீ., தேசிய பூங்காவாக அறிவிக்கப் பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 1991 - 92ல் ஆசிய யானைகள் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2007 - 08 ஆனைமலை புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது.உலகின் மிக அரிய உயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மொத்தம், 958 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப் பகுதியில், பல்வேறு வன உயிரினங்கள் வாழும் சூழ்நிலை உள்ளதுடன், பல வகை தாவர இனக்காடுகள், தட்பவெப்பநிலை கொண்டுள்ளது.

வறண்ட முட்புதர்காடுகள், இலையுதிர்காடுகள், ஈரப்பதமான இலையுதிர்காடுகள், பசுமை மாறாக்காடுகள், வெப்ப மண்டல மழைக் காடுகளான சோலைக்காடுகள், புல்வெளிகள் என பறந்து விரிந்த வனப்பகுதியாக விளங்குகிறது.இங்கு, 350 வகையான பறவை இனங்கள், புலி, சிறுத்தை, காட்டு மாடு, பாம்பு இனங்கள், குரங்குகள், வரையாடு மற்றும் அரிய வகை விலங்குகளும் வசிக்கும் பகுதியாக உள்ளது.

பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி உள்ளிட்ட ஆறு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, கண்காணிப்பு, நிர்வாகம் செய்யப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளான, திண்டுக்கல் டிவிஷனுக்கு உட்பட்ட பழநி, தேனி, கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து, ஒரு சில பகுதிகள், வெளி மண்டலமாக இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு ஆண்டாக எல்லை பிரிப்பு, புலிகள் நடமாட்டம் என, வனத்துறையினர் களப்பணிகள் மேற்கொண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில், அரசு உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக, 150 சதுர கி.மீ., பரப்பு (15,048 எக்டர்) இணைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், 958 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தற்போது, இப்பகுதிகளும் இணைக்கப்பட்டு, 1,109 சதுர கி.மீ., பரப்பு கொண்டதாக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகம் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இணைப்பு பகுதியில், வந்தரவு வனச்சரகம் ஏற்கனவே உள்ளது; புதியதாக கொழுமம் வனச்சரகம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, வன விலங்குகள் நடமாட்டம் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அலுவலர்கள் மற்றும் கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கவும்அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.எட்டு வனச்சரகங்கள்!ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆறு வனச்சரகங்கள் ஏற்கனவே உள்ளன. அதில் புதியதாக இரண்டு வனச் சரகங்களை சேர்த்தால், எண்ணிக்கை எட்டாக உயர்கிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை வனச்சரகம் பெரிதாக உள்ளது. மொத்தம், 27,406 எக்டர் பரப்பளவு கொண்ட உடுமலை வனச்சரகத்தை இரண்டாக பிரித்தால், கண்காணிப்பு, நிர்வாகம் இரண்டும் எளிதாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X