'நாடு கடத்தும் தீர்ப்பில் குளறுபடி': விஜய் மல்லையா வழக்கறிஞர் வாதம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (7)
Advertisement
VijayMallya,London,court,மல்லையா,விஜய்மல்லையா

லண்டன் : 'விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தீர்ப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன' என, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பத் தராமல், லண்டனுக்கு தப்பியோடி விட்டார். இதையடுத்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், 'விஜய் மல்லயாவை நாடு கடத்த வேண்டும்' என, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளேர் மான்ட்கோமரி செய்த வாதம்: விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காகவே வங்கியில் கடன் பெற்றார். அவர் ஏமாற்றும் எண்ணத்தில் கடன் பெறவில்லை. அவர், நள்ளிரவில் தப்பியோடும் அளவிற்கு மோசமானவர் அல்ல; வசதியானவர். அவர், 'பொன்ஸி' திட்டம் போல, மோசடி திட்டத்தை நடத்தவில்லை.மதிப்புமிக்க விமான நிறுவனத்தை நடத்தியவர். பொருளாதார சீர்குலைவால், இதர விமான நிறுவனங்கள் போல, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நலிவடைந்தது.





அவரை நாடு கடத்த உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி, அனைத்து சாட்சிகளின் வாதங்களையும் சரிவர ஆராயவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ஏராளமான குளறுபடிகள் உள்ள தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார். சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, விஜய் மல்லையா மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் சரியானவையா என, மீண்டும் ஆராய வேண்டி உள்ளது.

அவ்வாறு ஆராய்ந்தால், ராகேஷ் அஸ்தானா மீதே, சரிவர நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளது. எனவே, சரிவர ஆராயாமல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய குளறுபடி தீர்ப்புக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இவ்வழக்கில், இன்றும், நாளையும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நேற்று, விஜய் மல்லையா நீதிமன்றத்திற்கு நேரில் வந்திருந்து, வழக்கறிஞர்களின் வாதத்தை கூர்ந்து கவனித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
12-பிப்-202017:30:39 IST Report Abuse
Balasubramanian இந்த மாதிரி இழுத்து அடிக்கும் சட்ட-வழக்கியலை Jurisprudence நமக்கு விட்டுச் சென்றதே ஆங்கிலேயர்கள் தானே அதன் பலனை தான் கோடிக்கணக்கில் தேங்கி இருக்கும் வழக்குகளில் நாம் காண்கிறோமே அந்த கைவரிசையை அவர்கள் தங்கள் நாட்டில் காட்ட தயங்குவார்களா என்ன? கொள்ளை அடித்த பணத்தில் சில எலும்பு துண்டுகளை வீசி எறிந்தால் கேஸ் இழுத்து அடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202012:58:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இங்கிலாந்து சட்டத்தை தான் இந்தியாவிலும் சிறிது மாற்றி வைத்திருக்கிறார்கள் , இரண்டிலுமே ஓட்டைகள் தான் இருக்கிறது. எந்த குற்றவாளிக்கு பெரிய தண்டனை எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. நிர்பயா கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு கூட தூக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. வாழ்க இங்கிலாந்து சட்டம்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-பிப்-202009:59:44 IST Report Abuse
சீனி காசு உள்ளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் தப்பித்துவிடலாம். நமது ஓட்டை உடைசல் சட்டத்துக்கும் முன்னோடிகள் இங்கிலீசுதுரைகள் தான், அதனால் அவனுங்க சட்டம் நம்ம சட்டத்தவிட ஓட்டைகள் அதிகமாத்தான் இருக்கும். மல்லையா சகும் வரை லண்டன் வாசம் என முடிவாகிவிட்டது, அனுபவி ராஜா அனுபவி. மேலும் செலவு பண்ணி இந்திய அரசு, இங்கிலாந்து வரை போய் கேசு நடத்துறது பொதுமக்கள் பணம் வீண் என்பது என் கருத்து. மல்லையாவ வெச்சு வக்கீல்கள் 3 தலைமுறைக்கு சொத்து சம்பாதிக்கொள்வார்கள். வந்தவரை லாபம் என இந்தியாவில் இருக்க மல்லையாவோட சொத்தை ஏலம் போட்டு வங்கிகள் பிரித்துக்கொள்ளலாம். அடுத்து கார்த்தி சிதம்பரம் இப்படித்தான் தப்பி ஓடப்பார்த்தார், எனவெ அரசு இப்படி வங்கிகளில் கடன், வரி ஏமாற்றுதல் போன்றவர்களை அடையாளம் கண்டு, பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தால் தான் கிரிமினல்கள் நாட்டை விட்டு ஓடமுடியாது. ஆனா, நித்தி யார் கண்ணுக்கும் தெரியாம அல்வா கொடுத்துட்டு கைலாசாவுக்கு ஓடிட்டான், இப்படி எல்லா ஏமாத்துக்காரனங்களும் ஒன்னு சேர்ந்து புதுசா ஒரு நாடு உருவாக்குனாலும் ஆச்சரியப்பட முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X