பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லூரி கல்வி செய்திகள்

Added : பிப் 12, 2020
Advertisement

'பட்ஜெட்' சொற்பொழிவு
பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரியில், மத்திய பட்ஜெட் பற்றிய சொற்பொழிவு நடந்தது. கல்லுாரியின் இயக்குனர் சுப்ரமணியன் வரவேற்றார். வக்கீல் சோமசுந்தரம், எவ்வாறு ஒரு ரூபாயில் பட்ஜெட் போடப்படுகிறது, வருவாய் எப்படி பெறப்படுகிறது மற்றும் செலவினங்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என விளக்கினார்.

மேலும், 'பட்ஜெட்'டில் முன்னிலைபடுத்திய விஷயங்களை விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தை உட்புகுத்துவது, விவசாய கடன் அதிகரிப்பு, தொழில் முனைவோருக்கு உதவிகள், துாய்மை இந்தியா திட்டம் குறித்து தெரிவித்தார். மேலும், வங்கிகளில் வைப்பு நிதி காப்பீட்டு தொகை, ஒரு லட்சத்தில் இருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பு; பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை ஆகியவை குறித்து விளக்கினார். மாணவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

விருது வழங்கும் விழா

பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், உழவு பாரதம் சான்றிதழ் பாடத்திட்டத்தின் விருது வழங்கும் விழா நடந்தது.கல்லுாரியின் முதல்வர் (பொ) ேஷக்ஜான் தலைமை வகித்தார். பேராசிரியர் சக்தி வரவேற்றார். மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லுாரி செயலர் கற்பகவல்லி, ஏ.பி.டி., தொழில் நிறுவனங்களின் இயக்குனர் சம்யுக்தா வாணவராயர் முன்னிலை வகித்தனர்.உழவு பாரதம் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற, 1,700 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதலாவதாக தேர்ச்சி பெற்ற சரண்ராஜ், முகேஷ் ஆகிய மாணவர்களுக்கு, 'மண்ணின் மைந்தன்' என்ற விருதும்; வாசுகி, கிருத்திகா ஆகியோருக்கு, 'மண்ணின் திருமகள்' என்ற விருதும் வழங்கப்பட்டது.விழாவையொட்டி, 26 உழவர்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் முனைவோர்களிடம் மாணவர்களின் களப்பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.அனைத்து துறை மாணவர்களும் இணைந்து வேளாண்மை பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணதுளசிமணி நன்றி கூறினார்.

பள்ளி ஆண்டு விழா

பொள்ளாச்சி சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 33வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் செயலாளர் ஸ்ரீராமு வரவேற்றார்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் சுப்ரமணியன், பள்ளியின் வளர்ச்சி பற்றியும், வரும் காலங்களில் பள்ளி பெற வேண்டிய வளர்ச்சி நிலையைப் பற்றியும் விரிவாகக்கூறி பேசினார்.தாளாளர் செல்வநாயகம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளியின் முதல்வர் செல்வராஜ் ஆண்டு அறிக்கை படித்தார்.கபடி, கைப்பந்து, கால்பந்து, பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், யோகாவும் நடந்தது.

கல்லுாரியில் கருத்தரங்கு
பொள்ளாச்சி அருகே அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், 'மென்பொருள் திட்ட மேலாண்மை' கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரியின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செண்பகவடிவு வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் கனகலட்சுமி தலைமை வகித்தார். எஸ்.எஸ்., இன்போடெக் மேனேஜிங் டைரக்டர், திட்டம் மற்றும் அதன் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். துணை பேராசிரியர் அனீஷ் பாத்திமா நன்றி கூறினார்.

பள்ளியில் திறனறித்தேர்வு

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் கம்ப்யூட்டர் கல்வி கற்பது குறித்து திறனறித்தேர்வு (நாட்டமறித்தேர்வு) நடந்தது. இதில், 175 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறுகையில், ''பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை சோதிக்கும் வகையில் பல்வேறு வகையான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டாவது கட்டமாக முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில், நாட்டமறித்தேர்வு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று நாட்கள் நடக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X