கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆவின் தலைவராக ஓ.ராஜா தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை : தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு செயல்பட தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டி துவக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அம்மாவாசி தாக்கல் செய்த சீராய்வு மனு:மதுரை ஆவின் ஒன்றிய நிர்வாகத்தை மதுரை, தேனி என தனித்தனியாக பிரித்து தமிழக அரசு 2019 ஆக.,22 ல் அரசாணை பிறப்பித்தது. தேனி ஆவினை நிர்வகிக்க தலைவராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தலைமையில் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டது.

அவர்கள் 2019 செப்.,2 ல் பொறுப்பேற்றனர்.கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி ஜனநாயகமுறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக்குழுவை தேர்வு செய்யவில்லை. ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.ஜன.,23 ல் நீதிபதிகள் அமர்வு, 'உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஆவின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அந்நியமனம் தொடர்பாக தேனி பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை துணைப் பதிவாளர் ஆக.,26 ல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகள், துணை விதிகள்படி இடைக்கால நிர்வாகக்குழு அமைக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும்அவரது தலைமையில் இடைக்கால நிர்வாகக்குழு ஜன.,30 ல் நியமிக்கப்பட்டது. இதில் சட்டம், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

இச்சீராய்வு மனு நிலுவையில் உள்ளவரை தேனி ஆவினில் ஓ.ராஜா தலைமையிலான இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அம்மாவாசி மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு தள்ளுபடி செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X