நாட்டியாலயா மாணவியர் சலங்கை பூஜையில் பரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டியாலயா மாணவியர் சலங்கை பூஜையில் பரதம்

Added : பிப் 12, 2020
Share
 நாட்டியாலயா மாணவியர் சலங்கை பூஜையில் பரதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா சார்பில், சலங்கை பூஜை மற்றும் ஆறாம் ஆண்டு விழா நடந்தது. நடன ஆசிரியர் கீதா, இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஆன்மிகம், பாரதியார் பாடல், என, 14 பாடல்களுக்கு மாணவியர் நடனமாடி அசத்தினர். நாட்டியக் கலை மாணவியர்கள், முகபாவனையில் நவரசங்களை வெளிப்படுத்தினர்.

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியோடு, இசை, நடனம் போன்ற கலைகள் அல்லது விளையாட்டு பிரிவிலும் திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X