பொது செய்தி

தமிழ்நாடு

2030ல் விபத்துக்களில் உயிரிழப்புகள் இல்லாத தமிழகம்

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை : ''2030ல் விபத்துக்களில் உயிரிழப்புகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என மதுரையில் போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் 2 லட்சம் கி.மீ., நீளத்திற்கு ரோடுகள் உள்ளன. இரண்டு கோடியே 90 லட்சம் வாகனங்கள் ரோடுகளில் இயங்குகின்றன. இதில் டூவீலர்களின் எண்ணிக்கை 2.40 கோடி. ரோடுகளின் நீளம் அதிகம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம். விபத்துக்களில் உயிரிழப்புகளை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

2016 ல் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 200 ஆக இருந்தது. அரசின் நடவடிக்கைகளால் 2018 ல் 12 ஆயிரத்து 200, 2019 ல் 10 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளது.மதுரை, விருதுநகர்மாவட்டங்களில் 7ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு ரோடுகள் உள்ளன. 18 லட்சத்து 38 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. டூவீலர்களின் எண்ணிக்கை 16 லட்சம். 2016 ல் இரு மாவட்டங்களில் நடந்த சாலை விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்து இரண்டு.

அரசின் நடவடிக்கைகளால் 2019ல் உயிரிழப்புகள் 663 ஆக குறைந்துள்ளது. டிரைவர்கள் கவனக்குறைவு, ெஹல்மெட் இல்லாமல் டூவீலர்களை ஓட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க போலீஸ், போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சாலை பொறியியல் துறை மூலம் புதிதாக போடப்படும் ரோடுகள் பாதுகாப்பு அம்சத்துடன் அமைக்கப்படுகின்றன.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகம் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் பிளாக் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு எச்சரிக்கை அறிவிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.கரூரில் ஆட்டோமெடிக் டெஸ்ட் டிராக் ( தானியங்கி ஓட்டுனர் தேர்வு மையம்) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 இடங்களில் அமைக்கப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் இடங்களை சீரமைக்க அத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X