பொது செய்தி

தமிழ்நாடு

இது தான் 'ஜாலி' சுற்றுலாவா? இம்சிக்கும் இளசுகள் கூட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 இது தான் 'ஜாலி' சுற்றுலாவா? இம்சிக்கும் இளசுகள் கூட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழியே சுற்றுலா தலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும் இளைஞர்கள், சாலை பாதுகாப்பு குறித்து அக்கறையின்றி நடந்து கொள்கின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்து ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி, வால்பாறை என பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி வழியே சுற்றுலா செல்வது வழக்கம். அதிகளவில் இளைஞர்கள், தங்கள் தோழிகளுடன் பொழுதை கழிக்க, இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

இதில் பலரும், சாலை விதிகளை மதிக்காமலும், அதிவேகத்தில் பைக்குகளை இயக்கி சாகசம் செய்தும் பொதுமக்களை அலற வைக்கின்றனர்.சிலர்,ஜாலியாக பயணிக்கிறோம் என்ற பெயரில், வினோதமான செயல்களில் ஈடுபட்டு முகம் சுளிக்க வைப்பதும் உண்டு.

நேற்று, 'ராயல் என்பீல்ட்' பைக்கில் இளைஞர் ஒருவர் தோழியுடன் பயணித்தார். இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பெண் முகத்தை துப்பட்டாவால் முகமூடியாக போர்த்தியும், கண்ணாடி அணிந்தும் முழுக்க மறைத்திருந்தார்;ஹெல்மெட் அணியவில்லை.அந்த பெண், பைக்கின் பின் சீட்டில், வழக்கத்துக்கு மாறாக, ரோட்டை பார்த்து திரும்பி அமர்ந்து, கையில் மொபைல்போனை பார்த்தபடி பயணித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்ததையும், 'கமென்ட்' செய்வதையும் சட்டை செய்யாமல், காந்தி சிலை சிக்னல், கடைவீதி, வால்பாறை ரோடு வழியே தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

பைக்கில் செல்லும் இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து பயணிக்கும் போது, திடீரென பிரேக் அடித்தாலோ, வாகனம் தடுமாறினாலோ, ஓட்டுபவருக்கு சமநிலை கிடைக்காமல் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.குதுாகல சுற்றுலா செல்கிறோம் என்ற பெயரில், இது போன்ற கோமாளிதனங்களில் ஈடுபடுவோரை, போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X