பொது செய்தி

தமிழ்நாடு

'கடலில் தத்தளிக்கும் கப்பலிலிருந்து எட்டு நாட்களில் வீடு திரும்புவோம்'

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை : ''கொரோனா பீதியால், ஜப்பான் அருகே கடலில் நிறுத்தப்பட்ட கப்பலில், பத்திரமாக உள்ளோம். எட்டு நாட்களில் வீடு திரும்புவோம்,'' என, கப்பலில் இருந்து, மதுரை ஊழியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

'கொரோனா' பாதிப்பால், சீனாவில், 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 24 நாடுகளுக்கு, இந்நோய் பாதிப்பு பரவியுள்ளது.இதனால், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய, சுற்றுலாப்பயணியர் வர, உலக நாடுகள் பல தடை விதித்துள்ளன.இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, ஹாங்காங்கில் இருந்து, 3,700க்கும் மேற்பட்டோருடன், ஜப்பான் சென்ற கப்பல், கொரோனா பீதியால், யோக்கோஹாமா துறைமுகம் அருகே, நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.

அக்கப்பலை, தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க, ஜப்பான் மறுத்துவிட்டது. அதில், ஏழு தமிழர்கள் உட்பட, 200 இந்தியர்கள் தவிக்கின்றனர்.கப்பலில், 64 பேருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதாக, தகவல் வெளியானது. இதனால், கப்பலில் இருக்கும் மற்றவர்கள் பீதியடைந்துள்ளனர்.நடுக்கடலில் தத்தளிக்கும் தங்களை மீட்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

ஜப்பான் நாட்டு துாதரகம் மூலம், இந்தியர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.எனினும், கப்பலில் என்ன நடக்கிறது, பத்திரமாக வீடு திரும்ப வழியுள்ளதா என்பது தெரியாமல், மக்கள் பீதியடைந்துள்ளனர்.அக்கப்பலில், மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், சமையல் கலைஞராக பணிபுரிகிறார். அவர், தங்களை பத்திரமாக மீட்கக்கோரி, சமூகவலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டார். இது தமிழக அரசின் கவனத்திற்கும் சென்றது.இந்நிலையில் அவர், நம் நிருபரிடம் அலைபேசியில் கூறியதாவது:நடுக்கடலில், ஆறு நாட்களாக, கப்பல் நிற்கிறது.

முதலில், நிலைமை சற்று மோசமாக இருந்தது. இப்போது அனைவரும், பத்திரமாக இருக்கிறோம். அனைவரையும், எட்டு நாட்களில், சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக, கப்பல் நிறுவனம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, விரைவில் நாடு திரும்பி விடுவோம்.நம் நாட்டவர்கள் யாருக்கும், கொரோனா பாதிப்பில்லை. அனைவருக்கும் மருத்துவ உதவிகள், பரிசோதனை வழங்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில், கொரோனா அறிகுறி உள்ள, 125 பேரை அழைத்து சென்றுள்ளனர்.

அவர்களை, கப்பலுக்கு வெளியே தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை அறிந்தேன். நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X