சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்தில் 'வாக்கிங்' வேண்டாம் போக்குவரத்து போலீசார் அறிவுரை

Added : பிப் 12, 2020
Advertisement
 மேம்பாலத்தில் 'வாக்கிங்' வேண்டாம் போக்குவரத்து போலீசார் அறிவுரை

கோவை:மேம்பாலங்களில் வாக்கிங், ஜாகிங் செல்வதை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காந்திபுரம், 100 அடி ரோடு, டெக்ஸ்டூல், அவிநாசி ரோடு, சுங்கம் பைபாஸ், ஒண்டிபுதுார், வடகோவை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதிகாலை நேரங்களில் வாக்கிங், ஜாகிங் பயிற்சிகளுக்கு, இம்மேம்பாலங்களை பொதுமக்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து மேம்பாலங்களில் வாக்கிங், ஜாகிங் செல்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'காந்திபுரம், 100 அடி ரோடு டெக்ஸ்டூல், சுங்கம் பை-பாஸ் வடகோவை ஆகிய மேம்பாலங்களை, பொதுமக்கள் பலரும் வாக்கிங், ஜாகிங் செல்ல பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு தங்கள் பின்னால் வரும் வாகனங்கள் குறித்து தெரிவதில்லை. இதனால், விபத்து ஏற்படுகிறது. அதிகாலை நேரங்களில் 'ப்ரீ' ஆக இருக்கும் பாலத்தில், வாகனங்கள் வேகமாக செல்லும். ஜாகிங் செல்வோர் மீது மோத வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X