ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்; தமிழக கார்டில் மாற்றம் வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்; தமிழக கார்டில் மாற்றம் வருமா?

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தும் பட்சத்தில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு வடிவங்களில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சந்தேகம்:தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கப்படும், உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது. காகித வடிவில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், 2017 முதல்,
TN,TamilNadu,Ration_card,தமிழ்நாடு,ரேஷன்_கார்டு

தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தும் பட்சத்தில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு வடிவங்களில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


சந்தேகம்:

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கப்படும், உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது. காகித வடிவில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், 2017 முதல், மத்திய அரசின், 'ஆதார்' எண் விபரங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், ஒரே நபர், வேறு முகவரிகளில், கூடுதல் கார்டுகள் வாங்குவது தடுக்கப்பட்டது.

மத்திய அரசு ஜூன் முதல், நாடு முழுவதும், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதனால், பிற மாநில கார்டுதாரர்கள், தமிழக ரேஷன் கடைகளிலும்; தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களிலும் பொருட்கள் வாங்கலாம். இந்நிலையில், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில், ரேஷன் கார்டின் வடிவங்களில் மாற்றம் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


விபரம்:

இது குறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து மாநிலங்களிலும், ஆதார் எண் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், ரேஷன் கார்டில் என்னென்ன விபரங்கள் இருக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளதோ, அவை, தமிழக ரேஷன் கார்டுகளில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் வழங்கும் ரேஷன் கார்டில், அந்த விபரங்கள் தமிழில் உள்ளன. இதேபோல, மற்ற மாநிலங்களில், அவற்றின் மொழிகளில் உள்ளன. எனவே, தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தினாலும், ரேஷன் கார்டின் வடிவங்களில் மாற்றங்கள் செய்யப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X