சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருதமலை அடிவாரத்தில் கத்திக்குத்து; இருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

வடவள்ளி:மருதமலை அடிவாரத்தில் ஏற்பட்ட தகராறில், கத்திரிக்கோலால் குத்திய இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.க்ஷ

பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த, வீராச்சாமி என்பவரின் மகன்கள், சுபாஷ் 17, விஷ்ணு 16 இருவரும் மருதமலை கோவிலுக்கு வந்தனர்.அடிவாரத்திலுள்ள, பேன்சி ஸ்டோரில், மெட்டல் மோதிரம் வாங்க சென்றுள்ளனர். கடையில், மாடசாமி, 38 கோகுல், 18, ஆகியோர் இருந்து உள்ளனர். விலை பேசிக்கொண்டிருக்கையில், விஷ்ணுவுக்கும், மாடசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், மாடசாமி மற்றும் கோகுல், அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து, விஷ்ணுவின் வயிற்று பகுதியில் குத்தினர். அருகில் இருந்த மருத்துவமனையில் விஷ்ணு அனுமதிக்கப்பட்டார். விஷ்ணுவின் அண்ணன் சுபாஷ் கொடுத்த புகாரின் பெயரில், வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடசாமி மற்றும் கோகுலை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X