பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் 'ஹர்ஷா!' கோவை கல்லூரி மாணவரின் புது முயற்சி

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், 'ஹர்ஷா' என பெயரிடப்பட்ட ரோபோ தயாரித்து, காட்சிப்படுத்தியுள்ளார், கோவை இந்துஸ்தான் கல்லுாரி மாணவர் மனோஜ்குமார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கல்லுாரிகளில் 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' எனும், தொழில்நுட்பம் சார்ந்த பாடத்திட்டம் கையாள, வலியுறுத்தப் பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், நிதிசார்ந்த உதவிகளும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. 80 மாணவர்கள் தயாரித்த, 16 ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இதில், பி.சி.ஏ., மூன்றாமாண்டு மாணவர் மனோஜ்குமாரின் படைப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இவருடன், அதே வகுப்பை சேர்ந்த, வளன் ரோட்ஸ், அஸ்வின், சுதர்சன் ஆகியோரும் இணைந்து,வெறும் பிளாஸ்டிக், மின் இணைப்பு, சென்சார் கொண்டு, 'ஹர்ஷா' என்ற ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோ, மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர் மனோஜ்குமார் கூறுகையில், ''ஹர்ஷா ரோபோவில், சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளதால், சிறு அசைவுகளுக்கும் பதில் அளிக்கும். சம்பவ இடத்தில் நடக்கும் படங்கள், உடனுக்குடன் மொபைல்போனுக்கு பகிரப்படும். எங்கிருந்து வேண்டுமானாலும், ரோபோவுக்கு கட்டளையிட, பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை வாங்க திட்டமிட்டுள்ளேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோர், பிற வகை மாற்றுத் திறனாளிகள், வயதானோரின் தேவைக்கு ஏற்ப, இதில் மாறுதல் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்,'' என்றார்.கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, பி.சி.ஏ., துறைத்தலைவர் செந்தில்வடிவு, பேராசிரியர் சசிகலா உள்ளிட்டோர், மாணவர்களை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X