பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் துப்பாக்கி வேண்டும்! ரோந்து போலீசார் கேட்கின்றனர்!

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:சோதனை சாவடி போலீசாருக்கு ஆயுதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் சாதாரண போலீசாருக்கும், ஆயுதம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியின் போது, சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) வில்சன், இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். எஸ்.ஐ., சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடி போலீசாருக்கு, ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கும் ஆயுதம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஏன் ஆயுதம் வேண்டும்



போலீசார் சிலர் கூறுகையில், 'மாநகரம், மாவட்டம் ஆகிய இரு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இரவில் ரோந்து செல்லும் சாதாரண போலீசாரிடம், ஆயுதங்கள் இருப்பது இல்லை.களியக்காவிளையில் நடந்தது போல், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கும், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள், மிகவும் விலை மதிப்புமிக்கதாக இருக்கும் பட்சத்திலோ, போலீசாரை தாக்கி விட்டு, தப்பிச் செல்லவும் கயவர்கள் தயங்க மாட்டார்கள். ஆகவே, எங்களுக்கும் ஆயுதம் வழங்க வேண்டும்' என்றனர்.


'ஆயுதம் கிடையாது'

எஸ்.பி., சுஜித்குமாரிடம் இது குறித்து கேட்டதற்கு, ''வெளிமாநிலங்களில் இருந்து வரும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் ஊடுருவலை தடுக்கவே, சோதனை சாவடிகள் ஏற்படுத்தப் பட்டு, அங்குள்ள போலீசாருக்கு ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது. ஆபத்து காலங்களில் அவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும், எஸ்.ஐ., அந்தஸ்து உள்ள போலீசாருக்கு, துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பிற போலீசாருக்கு ஆயுதம் வழங்க அறிவுறுத்தப்படவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X