பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி, குனியமுத்தூர் மக்களுக்கு நல்ல செய்தி! குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:''மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள், மே மாதமும், பாதாள சாக்கடை பணிகள், 2021 அக்., மாதமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், 591 கோடி ரூபாய் மதிப்பிலும், குடிநீர் திட்ட பணிகள், 202 கோடி ரூபாய் மதிப்பிலும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், 14 வார்டுகள் பயன்பெறவுள்ளன.இப்பகுதிகளில், குடிநீர் திட்டப்பணிகளுக்காக, 18 குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், 2 குடிநீர் சமநிலை தொட்டிகளும், குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இப்பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர் கூறியதாவது: இப்பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள், 82 சதவீதமும், பாதாள சாக்கடை பணிகள், 43 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பம்சமாக, அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும், முதன்முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்படவுள்ளது.

குடிநீர் திட்ட பணிகள் வரும் மே மாதமும், பாதாள சாக்கடை பணிகள், 2021 அக்., மாதமும் பயன்பாட்டுக்கு வரும். திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதிகளின், 14வது வார்டுகளும் துர்நாற்றமற்ற சுத்தமான குடிநீர் வசதியை பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X