பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் அஸ்தானாவுக்கு நற்சான்று

Added : பிப் 12, 2020
Advertisement

புதுடில்லி : இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தனா, இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷியை, ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வங்கியதாக புகார் கூறப்பட்டது.இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., சார்பில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 'லஞ்ச வழக்கில், ராகேஷ் அஸ்தானாவுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தரகராக செயல்பட்டவரும், தொழில் அதிபருமான மனோஜ் பிரசாத் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X