கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணப்பட்டுவாடா புகார் அரசு, டி.ஜி.பி., பதில் தர உத்தரவு

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : ஆர்.கே.நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்துஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதில் 89 கோடிரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்குமாற்றக்கோரி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசு, டி.ஜி.பி. மற்றும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X