சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய், அன்புச்செழியன் ஆடிட்டர்கள் வருமான வரித்துறையில் விளக்கம்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள், வருமான வரி அதிகாரிகள் முன் நேற்று ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.

மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. அப்போது, 'பிகில்' பட வசூல் தொடர்பாக, சில ஆவணங்கள் சிக்கின.இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், அன்புச்செழியன், கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.அத்துடன், பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 24 மணி நேரம் நடந்த சோதனையில், விஜய் வீட்டிலிருந்து, ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக, மூன்று நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க, வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.முதல் நாளான நேற்று முன்தினம், விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இரண்டாவது நாளான நேற்று, விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள், மாலை, 6:45 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சென்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. அதேநேரத்தில், மூன்று நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, வரித்துறை விதித்த,'கெடு' இன்றுடன் முடிவதால், விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம் ஆகிய மூவரும், இன்று ஆஜராவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X