சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வலிப்பு நோயால் 50 லட்சம் பேர் பாதிப்பு'

Added : பிப் 12, 2020
Advertisement

ராயபுரம் : ''நாட்டில், 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என, நரம்பியல் துறை தலைவர் வேலுச்சாமி கூறினார்.ஸ்டான்லி மருத்துவமனையில், சர்வதேச வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.

பேரணியை, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தி மலர், கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர், கையில் பதாகைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இது குறித்து நரம்பியல் துறை தலைவர் வேலுச்சாமி கூறியதாவது:வலிப்பு நோய் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். நாட்டில், 50 லட்சம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு நோய் வந்தோருக்கு, இரும்பு பொருட்கள் கொடுத்தால், உடனே வலிப்பு நின்று விடும் என்பது தவறு; மூடநம்பிக்கை.இது மூளை பாதிப்பால் வருகிறது.

தொற்று நோயோ, மனநோயோ, பரம்பரை நோயோ அல்ல. மூளை காய்ச்சல், மூளை கட்டி, மூளையில் அடிப்படுதல் உள்ளிட்ட காரணங்களால், வலிப்பு நோய் வரலாம்.கைகள் வெட்டி இழுத்து, சுயநினைவை இழுத்தல், முறைத்து பார்த்தல், நடந்துகொண்டிருக்கும் போது, ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்று விட்டு, பிறகு வேலை தொடருதல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால், நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி முறையாக மருந்து, மாத்திரைகள் எடுத்து கொண்டால், 100ல், 80 பேருக்கு, நோயை குணப்படுத்தி விடலாம்.

ஸ்டான்லி மருத்துவமனையில், மாதந்தோறும், 2,500 பேர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.வாரம் ஒருமுறைஎன் மகள் தீப்திஸ்ரீக்கு, இரண்டரை வயதில் வலிப்பு வந்தது. வாரத்திற்கு ஒருமுறை, தொடர்ந்து வலிப்பு வந்தபடி இருக்கும். ஸ்டான்லி மருத்துவமனையில், 3 வயதில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறோம். கடந்த, ஏப்., 8ம் தேதி, என் மகளுக்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது, ஏழு மாதங்களாக வலிப்பு வரவில்லை. மருந்து, மாத்திரைகளையும் நிறுத்தி விட்டோம்.ஷில்பா, 22, கொருக்குப்பேட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X