சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி கும்பலுக்கு வலை

Added : பிப் 12, 2020
Advertisement

வடபழநி : செலுத்தும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

கொளத்துாரைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா, 37. வடபழநி போலீசில், நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வடபழநி, அழகிரி நகரில் உள்ள தனியார் அலுவலகத்தில் செலுத்தும் பணத்தை, 200 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறியதை அடுத்து, 2.10 லட்சம் ரூபாய் செலுத்தினேன்.ஆனால், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர்களான சிவகுமார், வினிதா, பிரபாகர் ஆகியோர் பணத்தை இரட்டிப்பாக்கி தராமல், அலைக்கழித்து வந்தனர்.

பணம் வேண்டி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததால், 1.25 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தனர்.மீதம் தர வேண்டிய பணத்தை வசூலிக்க, நேற்று முன்தினம் சென்ற போது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டேன். எனவே, பண மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பணத்தை மீட்டு தருமாறு அதில் கூறியிருந்தார்.வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X