பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்திற்கு நீர் திறப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : சென்னையின் குடிநீருக்காக, பூண்டி ஏரி நீரை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்பும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில், 6.23 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழலில், 2.80 டி.எம்.சி.,யும், பூண்டியில், 1.83 டி.எம்.சி.,யும், செம்பரம்பாக்கத்தில், 1.53 டி.எம்.சி.,யும் உள்ளது.ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீர், பூண்டி ஏரிக்கு வந்துக் கொண்டிருக்கிறது. நேற்று வினாடிக்கு, 464 கனஅடி நீர் கிடைத்தது.பூண்டி ஏரியில் உள்ள நீரை, சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த, கால்வாய்கள் வாயிலாக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்ப முடியும்.

புழல் ஏரியில் போதுமான நீர்இருப்பு உள்ளது. எனவே, பூண்டி ஏரியில் உள்ள நீரை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்பும் பணி, தீவிரமாக நடக்கிறது. நேற்று வினாடிக்கு, 424 கனஅடி நீர், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதனால், ஏரியில் வினாடிக்கு, 297 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. தொடர்ந்து நீர் வருவதால், ஏரியின் நீர் இருப்பு உயரும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X