சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : பிப் 12, 2020
Advertisement

பேருந்து மோதி இருவர் காயம்செம்மஞ்சேரி: பெரும்பாக்கம் - பாரிமுனை, மாநகர பேருந்து, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு அருகே சென்றபோது, ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், 31, பயணி ராணி, 48, ஆகியோர், படுகாயமடைந்தனர். ஆட்டோவும் சேதமடைந்தது. கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலில் குளிக்க தடைதிருவொற்றியூர்: வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில், போலீசார் கடலோர பகுதிகளில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது, கடலில் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில், அத்துமீறி யாராவது குளித்தால், 93840 39108, 93840 39109 ஆகிய மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்குமாறு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.500 மெகா வாட் உற்பத்தி நிறுத்தம்சென்னை: வல்லுாரில், என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல் மின் கழகம், மின் வாரியத்துடன் இணைந்து, தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. முதல் அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், 500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பாலம் கட்ட மக்கள் எதிர்ப்புமணப்பாக்கம்: கடந்த, 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், மணப்பாக்கம் பெரிதும் பாதித்ததையடுத்து, பல கோடி ரூபாய் செலவில், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்திராநகர் பகுதி வழியாக செல்லும் மழைநீர் கால்வாய் மீது, தனியார் கட்டுமான நிறுவனத்தினர், முறைகேடாக பாலம் கட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பாலம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி மனு அளித்தனர். பாலம் கட்டும் இடத்தை ஆலந்துார் எல்.எல்.ஏ., அன்பரசன் நேற்று பார்வையிட்டார்.

இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன.குழாய் உடைப்பால் குடிநீர் வீண்ஆலந்துார்: ஆலந்துாரில், நேற்று அதிகாலை குடிநீர் வாரியத்தின் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டபோது, ஆலந்துார், எம்.கே.என்., சாலையில், மின் வாரியம் பள்ளம் தோண்டிய இடத்தில், குடிநீர் குழாயை உடைந்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைஅடுத்து, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X