ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.61 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : பிப் 12, 2020
Share

சென்னை : கோலாலம்பூர், துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று நள்ளிரவு, 2:15 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த, உமர் பரூக் அலி, 51, என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 11.37 லட்சம் ரூபாய் மதிப்பில், 270 கிராம் தங்கக்கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று நள்ளிரவு, 2:30 மணிக்கு சென்னை வந்தது.

அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நுாருல் அமீன், 48, மற்றும் சென்னையைச் சேர்ந்த, சையத் முகமது, 51, ஆகிய இருவரையும் சோதனையிட்டபோது, 26.69 லட்சம் மதிப்பிலான, 634 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இன்னொரு சம்பவத்தில், மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'பாட்டிக்' ஏர் விமானம், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு சென்னை வந்தது.அதில் வந்த, சென்னையைச் சேர்ந்த அப்பாஸ், 34, என்பவரை சோதனையிட்டபோது, 'ரோலர் சூட்கேஸ்' கைப்பிடியில் இருந்து, 23 லட்சம் மதிப்பில், 547 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நான்கு பேரையும் கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X