பொது செய்தி

தமிழ்நாடு

அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

ஆலந்துார் : ஆதம்பாக்கத்தில், சுரங்கப்பாதை அணுகு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் அகற்றப்பட்டது.

ஆதம்பாக்கம் - -ஆலந்துார் இடையே உள்ள சுரங்கப்பாதையில், மக்கள் நடக்க வசதியாக, அணுகு சாலை உள்ளது. அதை ஒருவர் ஆக்கிரமித்து, சமையல் கூடமாக மாற்றி, பயன்படுத்தி வந்தார்.இது, பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. சமீபத்தில் நடந்த, ஆலந்துார் மாநகராட்சி மண்டல குறைதீர் முகாமில், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆலந்துார் மண்டல உதவி கமிஷனர் முருகன் உத்தரவில், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அணுகு சாலை ஆக்கிரமிக்கப்பட்டது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அக்கட்டடம் நேற்று அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X