பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கிரிக்கெட் அரையிறுதி விவேகானந்தா கல்லுாரி வெற்றி

Added : பிப் 12, 2020
Share
Advertisement

சென்னை : தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி அணி வெற்றி பெற்றது.

தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, 6ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆண்கள் பிரிவில், 20; பெண்கள் பிரிவில், 12 கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம், குருநானக் கல்லுாரியில் நடந்த, ஆண்கள் அரையிறுதி போட்டியில், லயோலா மற்றும் ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி அணிகள் மோதின.முதலில் பேட்டிங்கை துவக்கிய, ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி, 20 ஓவரில், 4 விக்கெட் மட்டும் இழந்து, 210 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய, லயோலா கல்லுாரி அணி, 188 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.போட்டியில், 46 பந்தில், 89 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டம் இழக்காமல், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான முகிலேஷ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பெண்கள் பிரிவில், பிரசிடென்சி மைதானத்தில் நடந்த அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங்செய்ய களமிறங்கிய, ஜெ.பி.ஏ.எஸ்., கல்லுாரி அணி, 20 ஓவரில், 8 விக்கெட் இழந்து, 71 ரன்கள் மட்டுமே எடுத்தது.அடுத்து களமிறங்கிய, பெண்கள் கிறிஸ்டியன் கல்லுாரி, 14.5 ஓவரில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 72 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X