பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ குணம் நிறைந்த பூ தேங்காய் விற்பனை ஜரூர்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை, புறநகர் பகுதிகளில், மருத்துவ குணம் நிறைந்த பூ தேங்காய் விற்பனை அதிகரித்து வருகிறது.தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே பூ தேங்காய். இது, மதுரை, தேனி, பொள்ளாச்சி, கடலுார் மாவட்டங்களில், மூன்று மாத பயிராக விளைவிக்கப்படுகிறது. ஒரு தேங்காயில், 200 கிராம் வரை இருக்கும். அதில், பூ தேங்காய், இளநீரில் இருப்பதை விட, அதிக சத்துக்கள் உள்ளன.

பூ தேங்காயில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.பூ தேங்காய், இன்சுலின் சுரப்பை துாண்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இதயம், ரத்த கொழுப்பை கரைக்கிறது.தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது. இதில், குறைந்த அளவு கலோரி இருப்பதால், உடல் எடை குறைய உதவுகிறது. சிறுநீரக பாதிப்பு, தொற்று நோய்களை குணப்படுத்தும் என, சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கோயம்பேடில், பூ தேங்காய் வரத்து காரணமாக சென்னை, புறநகரில், பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பூ தேங்காய், 40 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X