பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை வாலிபால்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : சென்னை மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை வாலிபால் போட்டியில், ஆண்கள் பிரிவில், வைஷ்ணவ் விளையாட்டு அகாடமி வென்றது.

மாநில அளவிலான, 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள், விரைவில் துவங்க உள்ளன. இதில் பங்கேற்பதற்கான, சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கின.முதற்கட்டமாக, வாலிபால் போட்டியில், 25 வயதிற்கு உட்பட்ட, இருபாலர் பிரிவிலும், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆண்கள் பிரிவில், வைஷ்ணவ் விளையாட்டு அகாடமி முதலிடம் வென்றது. நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் இரண்டாம் இடமும், லயோலா கல்லுாரி அணி மூன்றாம் இடமும் பிடித்தன.பெண்கள் பிரிவில், டாக்டர் சிவந்தி கிளப் முதலிடத்தைக் கைப்பற்றியது. எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி இரண்டாம் இடமும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மூன்றாம் இடமும் பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X