பக்தர்கள் வீசி எறியும் துணியால் மாசுபடும் வைகை

Added : பிப் 12, 2020
Advertisement

நிலக்கோட்டை, :அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு துணிகளை அங்கேயே விட்டுச் செல்வதால் ஆறு மாசுபடுகிறது.வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஆடி, தை மாத அமாவாசை நாட்கள் இறந்தோருக்கு ஈமக்கிரியை செய்வோர் ஆற்றில் நீராடிவிட்டு அணிந்திருந்த துணிகளை ஆற்றுக்குள் வீசிச் செல்கின்றனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு, துர்நாற்றம் வீசுகிறது.பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்து உணவருந்திவிட்டு ஆங்காங்கே வீசிச் செல்வதால் கோயில் வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ளன. ஆற்றைப் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் இதனை கண்டுகொள்ளாததால், ஆறு முழுவதும் கிழிந்த துணிகள் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் துணிகளை ஒரே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். பக்தர்களும் அறநிலைய, பொதுப்பணி, ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X