பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி..

Added : பிப் 12, 2020
Advertisement

மூதாட்டியிடம் 5 சவரன், 'அபேஸ்'பம்மல்: அனகாபுத்துாரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 70. இவர், நேற்று முன்தினம் மாலை, அம்பேத்கர் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த கும்பல், சரஸ்வதியை வழிமறித்து, கலவரம் நடப்பதால், நகைகளை கழற்றி பையில் வைத்து செல்லும்படி கூறியது. இதை நம்பிய மூதாட்டி, தன், 5 சவரன் நகையை கழற்றி, அந்த கும்பலிடம் கொடுத்தார்.

அவர்கள், பேப்பரில் மடித்து கொடுத்தனர். சிறிது துாரம் சென்றதும், கலவரம் நடக்கவில்லை என்பதை அறிந்த மூதாட்டி, நகைகளை போடுவதற்காக பேப்பரை பார்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதும், நகை திருட்டு போனதும் தெரிய வந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருடிய பெண்கள் சுற்றிவளைப்புஎழும்பூர்: எழும்பூர், காசா மேஜர் சாலையைச் சேர்ந்தவர் கல்யாண்குமார், 40. இவரது வீட்டில் பணிபுரிந்து வந்த சேத்துப்பட்டைச் சேர்ந்த லோகநாயகி, 48, என்பவர், 8 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடி, வேலையை விட்டு நின்றார். கல்யாண்குமார் அளித்த புகாரைஅடுத்து, எழும்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், லோகநாயகி, 48, பிரவீனா, 23, அமரேசன், 27, பிரவீன், 28, ஆகிய, நான்கு பேரை நேற்று, திருச்செந்துார், மணப்பாடு அருகே, சுற்றிவளைத்து கைது செய்தனர்.l சாஸ்திரி நகர்: அடையாறு, கற்பகம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 55. இவர் வீட்டில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த மலர், 34, என்பவர், ஏழு ஆண்டுகளாக பணி புரிந்தார்.

ஐந்து மாதத்திற்கு முன், சீனிவாசன் வீட்டில், பீரோவில் இருந்த, 7 சவரன் நகையை திருடி தப்பினார். சாஸ்திரி நகர் போலீசார், தலைமறைவாக இருந்த மலரை, நேற்று கைது செய்தனர். நகை பறிமுதல் செய்யப்பட்டது.வீடு புகுந்து 10 சவரன் திருட்டுசித்தாலப்பாக்கம்: சித்தாலப்பாக்கம், அரசன்கழனி, வேடந்தாங்கல் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜன், 29; கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். இவரது மனைவி இளவரசி, 27; தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்று இரவு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை மற்றும் இரண்டு, 'டிவி' திருடு போனது தெரிய வந்தது. பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

கட்டுமான நிறுவனத்தின் மீது புகார்பூந்தமல்லி: மாடம்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 36; தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில், நேற்று, புகார் ஒன்றை கொடுத்தார். அதில், காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, கட்டடங்களை கட்டி வந்தோம். இந்நிலையில், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை, அந்நிறுவனம் இதுவரை தரவில்லை. இது குறித்து கேட்டால், அந்நிறுவனத்தின் அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்றோருக்கு, 'கம்பி!'பேசின்பாலம்: கள்ளச்சந்தையில், கூடுதல் விலைக்கு மது விற்ற, பேசின்பாலம், கே.எம்., கார்டன் பகுதியைச் சேர்ந்த, தேவி, 41, சூர்யா, 24, ஆகியோரை, நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில், பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.

24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வழிப்பறி செய்தவர் பிடிபட்டார்சாஸ்திரிநகர்: பெசன்ட் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ், 27; தனியார் நிறுவன ஊழியர். 9ம் தேதி, பெசன்ட்நகர் கடற்கரைக்கு நடந்து சென்றார். ஓடைக்குப்பம் அருகில் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், 21, என்பவர், நாகராஜை கத்தியால் வெட்டி, பணம் பறித்துள்ளார். விசாரித்த சாஸ்திரிநகர் போலீசார், தலைமறைவாக இருந்த செல்வகுமாரை, நேற்று கைது செய்தனர்.கஞ்சா விற்ற நால்வர் அகப்பட்டனர்பல்லாவரம்: திரிசூலத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பல்லாவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், கஞ்சா விற்ற பல்லாவரத்தைச் சேர்ந்த கிஷோர் உள்ளிட்ட, நான்கு பேர் அகப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 750 கிராம் கஞ்சா, மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கொலை குற்றவாளி சிக்கினான்ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, பி.பி.குளம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், ராம்குமார், 24; மெக்கானிக். சில தினங்களுக்கு முன், ஆட்டோவில் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். விசாரித்த ஐஸ்ஹவுஸ் போலீசார், ஏழு பேரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளி கார்த்திக், 26, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஆலப்பாக்கத்தில் பதுங்கியிருந்த கார்த்திக்கை, போலீசார் கைது செய்தனர்.மருத்துவமனை கண்ணாடி உடைப்புதிருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, ஆதாம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர், குலாம், 30. அவர் நேற்று, தன் நண்பர் ரஹமதுல்லாவுடன் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மதுகுடிப்பதற்காக பணம் கேட்டபோது, குலாமின் தாய் பணம் தரமறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த குலாம் மருத்துவமனை கண்ணாடி கதவை உடைத்துள்ளார். தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், கண்ணாடி உடைத்த இருவரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்திருவொற்றியூர்: திருவொற்றியூர் மற்றும் கத்திவாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து, ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த இருந்த, 1 டன் ரேஷன் அரிசியை, திருவொற்றியூர் மண்டல உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் தலைமறைவாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X