சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல கொள்ளையனிடம் 1 கிலோ தங்க நகை பறிமுதல்

Added : பிப் 12, 2020
Advertisement

அண்ணாநகர் : கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட, பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனிடமிருந்து, 1 கிலோ தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சியில், பிரபல தனியார் நகைக்கடையில், சுவரை துளையிட்டு, 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருச்சி போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில், பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் சரணடைந்தார். அவர் மீது, அண்ணாநகர் உட்பட பல இடங்களில் கொள்ளை வழக்கு நிலுவையில் இருந்தது.அண்ணாநகர் போலீசார், முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற போலீசார், ஒரு வாரம், முருகனை, திருச்சி, மதுரை உட்பட பல மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், அவனிடமிருந்து, 1 கிலோ தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X