பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டி இல்லை; எங்கே குப்பை கொட்டுவதென தெரியவில்லை!

Added : பிப் 12, 2020
Advertisement

சுவாசத்திற்கே சிரமம்ஆர்.எஸ்.புரம் வி.ஓ.சி.,வீதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில், குப்பைகளை குவித்து தீயிட்டு கொளுத்துவதால், அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறிவிடுகிறது. குழந்தைகளும் வயோதிகர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.-கிருஷ்ணராஜ்,ஆர்.எஸ்.புரம்

குப்பைமலைதெலுங்குபாளையம் சுப்ரமணிய உடையார் வீதியில், குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பை குவியலாக, கொட்டப்பட்டு பரவிக்கிடக்கிறது.-பாலாஜிமோகன் ராஜ், தெலுங்குபாளையம்.

சிதைந்தது கேபிள்மாநகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட, விக்னேஷ் நகரில், குடிநீர் குழாய் பதிக்கும் போது, புதைவடப்பாதையிலிருந்த கேபிள்களை சிதைத்து விட்டனர்.-பாலசுப்ரமணியம், விக்னேஷ் நகர்

சாய்ந்தது மின் கம்பம்பீளமேடு புதுாரில் மாரியம்மன் கோவில் வீதியில் நீண்ட நாட்களாக மின் கம்பம் பழுது பட்டு சாயும் நிலையிலுள்ளது. -ஜான்சன், பீளமேடுபுதுார்

வீணாகும் குடிநீர்காளப்பட்டி சாலையிலுள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது.-கார்த்திக், காளப்பட்டி

கழிவு கலக்கிறதுகணபதியிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சாக்கடை கால்வாயில் மண் கொட்டப்பட்டதால் தண்ணீர் தேங்கி, அருகே உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் தொட்டியில் கலக்கிறது.-செந்தில் வடிவு, கணபதி.

விளக்கு எரிவதில்லைஆவாரம்பாளையம் தெற்கு வீதி 7ல், ராஜேஸ்வரி மெடிக்கல் முன் உள்ள மின் கம்பம் மற்றும் அதற்கடுத்து உள்ள மின் கம்பத்தில், மின் விளக்குகள் எரிவதில்லை.-பரமசிவம், ஆவாரம்பாளையம்

பழுதான சாலைசிங்காநல்லுாரிலிருந்து வெள்ளலுார் செல்லும் சாலை துவங்கும் பகுதி, சரிசெய்யப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-ராமச்சந்திரன், சிங்கை நகர்.

எரியாத விளக்குமாநகராட்சிக்குட்பட்ட, 97வது வார்டு கோபாலபுரம் பகுதியில் கடந்த, 15 நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை, புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.-சிவகுமார், ஸ்ரீ கோபாலபுரம்.

குழியை சரியா மூடுங்கவடவள்ளியிலிருந்து தொண்டாமுத்துார் செல்லும் சாலையில், குடிநீர் குழாய் பதிக்க சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.-சுரேஷ், வடவள்ளி.

புற்செடிகள் அகற்ற வேண்டும்தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொட்டதாசனுார் பிரிவு முதல் குட்டைப்புதுார் கிட்டாம்பாளையம் வரையிலான சாலை ஓர புற்செடிகளை, அப்புறப்படுத்த வேண்டும்.-அருண், தொட்டதாசனுார்.

நுழைந்தது கழிவுநீர்கணபதிபுதுார் 47வது வார்டு சங்கனுார் சாலையில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் எதிரில் கழிவுநீர் வீடுகளுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.-ஈஸ்வரன், கணபதிபுதுார்.

நாய் தொல்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, கஸ்துாரி நகர், அஷ்டலட்சுமி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையின் நடுவில் படுத்துறங்கும் இவை, வாகன ஓட்டிகளை துரத்துகின்றன.- கணேசன், அண்ணா நகர்.

வீணாகும் குடிநீர்சாய்பாபாகாலனி கே.கே.புதுாரிலுள்ள பழனிசாமி வீதியில், கடந்த சில தினங்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது.-கார்த்திக், கே.கே.புதுார்

குப்பை குவியல்பீளமேடு, பாலகுரு கார்டன் செல்லும் சாலையில், குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது; காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சிவராமன், பீளமேடு.

சாக்கடை கால்வாய் அடைப்புஒண்டிப்புதுார், காமாட்சிபுரத்தில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்குகிறது.-நாகராஜ்,

காமாட்சிபுரம்.

காத்திருக்கும் சைக்கிள்கள்விலையில்லா சைக்கிள்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக துரு ஏறி, பள்ளிகளில் வீணாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை விரைவாக வழங்க வேண்டும்.-சம்பத், பீளமேடு.

குப்பை சிதறல்சாய்பாபா காலனி சர்ச் சாலையில், குப்பை அப்புறப்படுத்தாமல் குவிந்துள்ளது.-கணேஷ், சாய்பாபாகாலனி

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாச்சம்பாளையம், சிறுவாணி பொதுக்குழாய் அருகில் உள்ள, ரேஷன் கடையை ஒட்டிச் செல்லும் சாக்கடை கால்வாயில், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது; இக்கால்வாயை துார்வார வேண்டும்.- மணிகண்டன், இடையர்பாளையம்.

பாதையில் மின்ஒயர்பீளமேடு ஜெயின் அபார்ட்மென்ட் முன்பு நடைபாதையில் மின்ஒயர் கிடக்கிறது. அப்புறப்படுத்த வேண்டும்.-யுவராஜ்,

திருமகள்நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X