பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.14ல் கொசவபட்டி ஜல்லிக்கட்டு : அந்தோணியார் திருவிழாவையொட்டி

Added : பிப் 12, 2020
Advertisement


சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் உத்திரியமாதா ஆலய வனத்து அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள்(பிப்.14) அன்று ஜல்லிக்கட்டு விழா நடக்க உள்ளது.கடந்த வியாழன்(பிப்.7) முதல் நவநாள் ஜெபம் நடந்து வருகிறது. நாளை இரவு பொதுமக்கள் சார்பில் தை மாட்டுப் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு நன்மை வேண்டி ஜெபம் நடைபெறும். தொடர்ந்து வாணவேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க மின் அலங்கார தேர்பவனி நடக்க உள்ளது. மறுநாள் காலை தேர்பவனி நிறைவையடுத்து சிலுவை திண்ணைகளில் புனிதர்களின் ஸ்ரூபங்கள் இறக்கி வைக்கப்படும். தொடர்ந்து ஆலயத்தில் ஜெபம் செய்து வேட்டி, துண்டுகள் அழைக்கப்பட்டு அரசு அதிகாரிகள் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.இதற்காக வாடிவாசல் அமைத்தல், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. காளைகளுக்கு உரிமையாளரின் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 500 க்கும் மேற்பட்ட காளைகளுக்கும், 400 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X