பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

குஜிலியம்பாறை, கோட்டாநத்தம் ஊராட்சி கோட்டாநத்தத்தில், கால்நடை கிளை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வருகின்றனர். பசுக்களுக்கு சினை ஊசி மற்றும் சிகிச்சை அளித்தல் பணிகளுக்காக தினமும் பலர் வருகின்றனர். இந்நிலையில் இங்கு செயல்படும் கிளை நிலையம் பழுதடைந்துள்ளதால் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது பணிகள் முடிந்த நிலையிலும், புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் புதிய கட்டடத்தை திறக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் கூறியதாவது: இங்கு தினமும், கால்நடை வளர்ப்போர் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். புதிய கட்டடம் கட்டி, பணிகள் முடிந்தபின்னும் அது யாருக்காக காத்திருக்கிறது என தெரியவில்லை. உடனே புதிய கட்டடத்தை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், விவசாயிகள் பயன்பெறுவர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X