பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் தீ பிடிப்பதை தடுக்க தடுப்புக்குழு

Added : பிப் 12, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் தீ பிடிப்பதை தடுக்க 8 பேர் கொண்ட தீ தடுப்பு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தொலைவில் சிறுமலை உள்ளது. கொடைக்கானலுக்கு அடுத்த படியாக உள்ள மலைவாஸ்தலமான சிறுமலை 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் மூலிகைகள், ஓங்கி உயர்ந்த மரங்கள் உள்ளன. மலை வாழை, பலா, எலுமிச்சை, ஆரஞ்ச், மிளகு அதிகம் சாகுபடியாகிறது. காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. இதனால் சிறுமலை காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.தீ தடுப்பு குழு தயார்இந்தாண்டு போதிய மழையின்மையால் கோடைக்கு முன்பே பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. சிறுமலை, கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், மூலிகைகள் தண்ணீரின்றி வாடி வருகின்றன. இதனால் சருகுகளில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க தீத்தடுப்பு பயிற்சி பெற்ற 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமலை ஊராட்சி கூட்டத்திலும் காட்டுத் தீயிடம் இருந்து வனத்தை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பட்டா நிலங்களில் தீ வைப்பவர்கள் முன்னதாக அனுமதி பெற வேண் டும். மலைவாழ் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. தீப்பற்றியது தெரிந்தால் உடனே தகவல் தரவேண்டும். வன விலங்குகளின் குடிநீர் தேவைக்கு 2 தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X