திண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : பிப் 12, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் எஸ்.பி.எம்., என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் நடந் தது. என்.பி.ஆர்., டிராபி போட்டியில் திண்டுக்கல் எஸ்.பி.எம்., அணி 27.4 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹரிஹரன் 32 ரன், நிதிஷ்குமார் 4 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., அணி 27.4 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.மற்ற போட்டிகளில் காந்திகிராம் அணி 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. நோயல் விஜய் 62, சிவா 48 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் எஸ்.பி.எம்., பாலிடெக்னிக் அணி 18.4 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.* திண்டுக்கல் ஜி.டி.என்., அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் பல்கலை பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தோற்றது. மற்றொரு போட்டியில் திண்டுக்கல் எஸ்.பி.எம்., அணி 25 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் அனுகிரஹா இன்ஸ்டிடியூட் அணி 20.3 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.* அய்யலுார் ஆர்.வி.எஸ்., அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வேடசந்துார் எம்.கே.யு., கல்லுாரி அணி 24.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களுக்கு வெற்றி பெற்றது. பிரபு 73 ரன், சிவகுமார் 3 விக்கெட் எடுத்தனர். மற்றொரு போட்டியில் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., அணி 24.3 ஓவரில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல் கரீம் மற்றும் சந்தோஷ்குமார் தலா 63 ரன், தினேஷ்குமார் 4 விக்கெட் எடுத் தனர். அடுத்து ஆடிய எஸ்.பி.எம்., பாலிடெக்னிக் அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுக்கு தோற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X