பொது செய்தி

தமிழ்நாடு

19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை : சென்னையில், 19ம் தேதி, துணை மருத்துவம் சார்ந்த, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

கிண்டியில் உள்ள, மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், 19ம் தேதி காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, முகாம் நடக்கும். இதில், 10க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. துணை மருத்துவ படிப்புகளான, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., டிப்ளமா, பி.பார்ம்., எம்.பார்ம்., அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் படித்துள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.வேலை தேடுவோர், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுய விபர குறிப்புடன் பங்கேற்க வேண்டும். முன்பதிவு அவசியம் இல்லை.

மேலும் விபரங்களுக்கு, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது, 044 - 2250 0134 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.'குரூப் - 4' இலவச பயிற்சிகிண்டியில் உள்ள, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், 15ம் தேதி முதல், வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், 14ம் தேதிக்குள், பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 0134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X