பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டை மாரியம்மன் கோயிலில்பிப்.20ல் மாசித்திருவிழா துவக்கம்

Added : பிப் 12, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.20 ல் துவங்குகிறது.திண்டுக்கல்லில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.20 மாலை 6:00 மணிக்கு பூத்த மலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்க உள்ளது.பிப்.21 காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல், பிப்.23 இரவு 8:00 மணிக்கு சாட்டுதல், பிப்.25 பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம், பிப்.28 பகல் 2:00 மணிக்கு அம்பாள் நாகல் நகர் புறப்பாடு நடக் கிறது.இதைத் தொடர்ந்து மார்ச் 6 ம்தேதி காலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், இரவு 8:00 மணிக்கு தேர் பவனி, மார்ச் 7 இரவு 10:00 மணிக்கு தசாவதாரம், மார்ச் 8 காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5:00 மணிக்கு கொடி இறக்கம், மார்ச் 9 இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், மார்ச் 10 மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது என, கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X