தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 12, 2020
Share
சென்னை : சென்னையில் நாளை, இலவச தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நாளை காலை, 9:30 மணிக்கு, முகாம் துவங்கும். சுயமாக தொழில் துவங்க விரும்பும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள, தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்றவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.முதற்கட்டமாக, சொந்தமாக தொழில்

சென்னை : சென்னையில் நாளை, இலவச தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நாளை காலை, 9:30 மணிக்கு, முகாம் துவங்கும்.

சுயமாக தொழில் துவங்க விரும்பும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள, தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்றவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் துவங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் முனைவோருக்கு, அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முகாமில் விவரிக்கப்படும்.பயிற்சி முகாம் இறுதியில், தொழில் துவங்க விரும்புவோர் பெயர்கள் பெறப்பட்டு, அவர்கள் அடுத்தகட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.மேலும் விபரங்களுக்கு, 70109 12966, 94453 76146 ஆகிய எண்களை, தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X