அதிருப்தியால் 24 மணி நேரத்திற்குள் இலாகாக்கள் மாற்றம்

Added : பிப் 12, 2020
Advertisement

பெங்களூரு : புதிய கர்நாடக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டு, 24 மணி நேரத்துக்குள் அதிருப்தி வெடித்தது.

அதிருப்தியாளர்களின் நெருக்கடிக்கு பணிந்த முதல்வர் எடியூரப்பா, மூன்று அமைச்சர்களின் துறைகளை மாற்றினார். இருவர் வகித்து வந்த சில துறைகளை பறித்து, மேலும் இருவருக்கு கூடுதல் துறை ஒதுக்கினார்.கர்நாடகத்தில் பா.ஜ., அரசு அமைய காரணமாக இருந்து, சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற 11 எம்.எல்.ஏ.,க்களில் 10 பேர், பிப்ரவரி 6ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் துறைகள் ஒதுக்கப்பட்டன.

பெரும்பாலானோருக்கு அவர்கள் விரும்பிய துறை வழங்கப்பட்டது. உள்துறையை எதிர்பார்த்த பி.சி.பாட்டீலுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது.இதனால் அதிருப்தியடைந்த அவர், பெங்களூரு, டாலர்ஸ் காலனியிலுள்ள இல்லத்தில், முதல்வர் எடியூரப்பாவை நேற்று காலையில் சந்தித்து பேசினார்; துறையை மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வருவதற்குள், பி.சி.பாட்டீல் உட்பட, சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டது. கவர்னர் வஜுபாய் வாலாவும் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

இதன்படி, பி.சி.பாட்டீலுக்கு ஒதுக்கப்பட்ட வனத்துறை ஆனந்த் சிங்கிற்கும்; உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கூடுதலாக இருந்த விவசாய துறை, பி.சி.பாட்டீலுக்கும்; கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹானிடம் கூடுதலாக இருந்த சிறுபான்மை நலத்துறை, ஸ்ரீமந்த் பாட்டீலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.ஆனந்த் சிங்கிற்கு ஒதுக்கப்பட்ட உணவு மற்றும் பொது வினியோக துறை, கோபாலய்யாவுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய தொழில் துறையை, தன்னிடம் முதல்வர் எடுத்துக் கொண்டார்.

பைரதி பசவராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கர்நாடக நகர அபிவிருத்தி துறையுடன், மாநில நகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், கர்நாடக நகர உள்கட்டமைப்பு அபிவிருத்தி வாரியம்; கோபாலய்யாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருந்த சர்க்கரை துறை, சிவராம் ஹெப்பாருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X