சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தொண்டாமுத்தூர்' ஆக மாறணும் அப்போதுதான் சாலை ஆக்கிரமிப்பும், பல மாத குழாய் உடைப்பும் முடிவுக்கு வரும்

Added : பிப் 12, 2020
Share
Advertisement
'அரசு என்று ஒன்று இருக்கி றதா?' என்பதுதான், சுந்தரா புரம்- மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக தினமும் மேடு பள்ளத்தில் குதித்து குதித்து பயணிக்கும், பொதுமக்களின் ஆவேசமான கேள்வி. அந்தளவுக்கு சாலை மோசமாக உள்ளது. கோவை பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரி கோவில் அருகில், மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், சுந்தராபுரம்
 'தொண்டாமுத்தூர்' ஆக மாறணும் அப்போதுதான் சாலை ஆக்கிரமிப்பும், பல மாத குழாய் உடைப்பும் முடிவுக்கு வரும்

'அரசு என்று ஒன்று இருக்கி றதா?' என்பதுதான், சுந்தரா புரம்- மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக தினமும் மேடு பள்ளத்தில் குதித்து குதித்து பயணிக்கும், பொதுமக்களின் ஆவேசமான கேள்வி. அந்தளவுக்கு சாலை மோசமாக உள்ளது.

கோவை பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரி கோவில் அருகில், மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.இதனால், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் செல்லும் வழித் தடத்தில், வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

அத்தனை வாகனங்களும் செல்வதற்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை.100 அடி அகலப்பாதை 40 அடியானது!இந்த சாலையானது, 100 அடி அகலம் கொண்டது. ஆனால், சுந்தராபுரம் சந்திப்பில், வெறும் 40 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. அந்தளவுக்கு இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இதை அகற்றுவதற்கு, நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கண் முன்னே அதிகரிக்கும் ஆக்கிரமிப்பை, வேடிக்கை பார்த்தபடி, பொழுதை கழிக்கின்றனர் அதிகாரிகள்.இதனால், வழித்தடத்தில் வாகன நெரிசலும், விபத்து சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. விபத்துக்கு பயந்து, ஆமை வேகத்தில் தட்டுத் தடுமாறி செல்லும் நிலைக்கு, வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

உழவர் சந்தையில் இருந்து காமராஜர் நகர் வரை, சாலையின் இரு புறமும், மணல் படிந்திருக்கிறது. மணலில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிபடும் சம்பவங்கள், அன்றாடம் நடக்கின்றன. ஆனாலும், யாருக்கு அடிபட்டால் நமக்கென்ன என்ற, பாவனையில் நெடுஞ்சாலைத்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.ஒருவேளை, சுந்தராபுரத்தின் பெயரை, அமைச்சரின் தொகுதியான 'தொண்டாமுத்துார்' என்று மாற்றினால், கவனிப்பார்களோ என்னவோ!பொதுமக்களின் அதிருப்தியை சரி செய்ய, உடனடியாக அரசுத்துறையினர் களம் இறங்க வேண்டியது அவசியம்.

இல்லையெனில், வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில், ஓட்டு சேகரிக்க வரும் ஆளும் கட்சியினரை, வாக்காளர்கள் விரட்டியடிப்பர்.'துண்டைக்காணோம்; துணியைக்காணோம்' என்று ஓட வேண்டியதிருக்கும் என்பது உறுதி!

வேலை நடக்க வேண்டும் என்றால்உயிர் பலி ஏற்பட வேண்டுமா?

சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்? அமைச்சரோ அல்லது கலெக்டரோ உத்தரவிட்டால் மட்டுமே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் எனில், அவர்களது பணி பொறுப்புதான் என்ன?

வாங்கும் சம்பளத்துக்கு செய்யும் வேலை என்ன என்றெல்லாம், பொதுமக்கள் ஆவேச கேள்வி எழுப்புகின்றனர்.'விபத்து நடக்கட்டும், உயிர் பலி ஏற்படட்டும்; பிறகு பார்த்துக் கொள்வோம்' என்ற எண்ணத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருப்பதாகவே, இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

ரோடெல்லாம் பள்ளம்அமைச்சரை தேடுது மக்கள் உள்ளம்!

சுந்தராபுரம் உழவர் சந்தை எதிர்புறம் இரு இடங்களில், தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய தோண்டிய மாநகராட்சி ஊழியர்கள், ஆமை வேகத்தில் வேலை செய்து, பொதுமக்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டனர். அதில் ஏற்பட்ட மேடு பள்ளங்களை கூட சரி செய்யாமல், அப்படியே விட்டுச் சென்று விட்டனர். இவற்றில் அன்றாடம் வாகன ஓட்டிகள் சிக்கி திணறுகின்றனர். இதில் பயணிக்கும் ஒவ்வொருவரும், 'இதெல்லாம் நம்ம அமைச்சர் வேலுமணிக்கு தெரியுமா, தெரியாதா' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X