பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்

Added : பிப் 12, 2020
Advertisement

பம்மல் : பம்மல் நகராட்சியில், தடையின்றி குப்பை சேகரிக்க வசதியாக, பழுதாகி கிடந்த பேட்டரி வாகனங்கள் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பம்மல் நகராட்சியில், 21 வார்டுகளும், தினசரி, 38 டன் குப்பையும் சேகரமாகிறது. இதில், 12 டன் மக்கும் குப்பை, ஆறு உரக்கிடங்குகள் மூலம், உரம் தயாரிக்கப்படுகிறது.மக்காத குப்பை, பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. வார்டுகள் தோறும் குப்பை சேகரிக்க வசதியாக, கடந்தாண்டு, 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.சில மாதங்கள் மட்டுமே, அவை இயங்கின. அதன்பின், பழுதாகி ஓரங்கட்டப்பட்டன. வேறு வழியின்றி, மூன்று சக்கர சைக்கிள்களால், குப்பை சேகரிக்கப்பட்டது.

இதனால், பணியில் சுணக்கம் ஏற்பட்டு, 21 வார்டுகளிலும் குப்பை தேங்கியது.குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தால், அதை முறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓரங்கட்டப்பட்ட பேட்டரி வாகனங்களை கண்டறிந்து, சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பணி முடிந்து, 15 பேட்டரி வாகனங்கள், 13 லோடு ஆட்டோக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் வீடுகள் தோறும், இனி தடையின்றி குப்பை சேகரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X